ஆளுநர் இராகவனின் உத்தரவை மீறிய அவரது மக்கள் தொடர்பு அதிகாரி


வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தான் தன்னை தமிழ் மொழியின் மீது அக்கறை கொண்டவராக காட்டிக்கொள்வதோடு வடக்கு மாகாணத்தில் தமிழிற்கு தான் முதன்மை வழங்குவதாக  காட்டிக்கொள்ள முயன்றபோதும்  அதற்கு எதிர்மாறாக அவரது மக்கள் தொடர்பு அதிகாரியே செயற்பவது அம்பலமாகியுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கடந்த ஜனவரி 9ஆம் திகதி யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற கையுடன், வடக்கு மாகாண அரச நிறுவனங்களில் மும்மொழிக்கொள்கை வரும் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் சீரமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அத்துடன், வடமாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் தலைமையில் ஐவரடங்கிய சிறப்புக் குழுவொன்றையும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமிப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ஆளுநரின் மக்கள் தொடர்பு  அதிகாரி தனது வாகனத்தில் சிங்கள மொழியில் மட்டும் எழுதிய அறிவித்தல் பலகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார்.

மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரியின் இந்தச் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

No comments