கணேஸ் வேலாயுதமும் புதுக்கட்சி தொடங்கினார்


ரெலோ கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக பணியாற்றிவந்த கணேஸ் வேலாயுதம் கடந்த ஆண்டு ரெலோவிலிருந்து பதவி விலகிய நிலையில் இன்று புதிய கட்சி ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

 “மக்கள் முன்னேற்றக் கூட்டணி” என்ற தனது கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வினை இன்று அவர் மேற்கொண்டிருக்கிறார்.

கட்சியின் அலுவலகத்தைத் துறந்துவைத்து உரையாற்றிய அவர்,

போர் நிறைவடைந்ததாக கூறப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பொது மக்களின் பொருளாதார, கல்வி, சமூக பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையிலேயே இன்றும் காணப்படுகிறது.

இவற்றை தீர்ப்பதற்கு முன்னின்று செயற்படவேண்டிய அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு தங்களது சுயலாபம் கருதிய அரசியல் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து எமது மக்களை மீட்க வேண்டிய கடமையும் பொறுப்பும் சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு பிரஜைகளின் கடமையாகவே நாங்கள் கருதுகின்றோம். அக்கடமையினை “மக்கள் முன்னேற்றக் கூட்டணி”

ஊடாக மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் இக்கட்சி அலுவலகத்தினை இன்று (18.02.2019) ஆரம்பித்து வைக்கின்றோம். மக்களது மேலான ஒத்துழைப்பும் ஆதரவும் இதற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

கட்சியின் செயலாளர் நாயகமும் சிவன் அறக்கட்டளை ஸ்தாபகருமாகிய திரு.கணேஸ் வரன் வேலாயுதம்  மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்க நிகழ்வில் கட்சியின் பெயர் ப்பலகையினை முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான சி.மோகனதாஸ் அவர்கள்

திரைநீக்கம் செய்துவைத்தார். அலுவலக கட்டடத்தினை அவுஸ்ரேலியாவினைச்சேர்ந்த ராஜ் சிவநாதன் நாடாவெட்டி திறந்து வைத்திருந்தார். அத்துடன் பேராசிரியர்கள் வைத்திய கலாநிதிகள் இபெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

எங்களுடைய கட்சியின் முக்கிய செயற்பாடுகளாக கல்வி மேம்பாடு பொருளாதார அபிவிருத்தி  ஊழல் ஒழிப்பு விளையாட்டுதுறை வளர்ச்சி சுகாதார விருத்தி போரால் பாதிக்கப்பட்ட

மக்களுக்கான புனர்வாழ்வு, சுற்றுலாதுறை ஊக்குவிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பன உள்ளடங்கும் - எனத் தெரிவித்துள்ளார்.

No comments