மாகாணசபைத் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டம் ஆராய்ந்து வருவதாக அந்தக் கட்சியின் முக்கிஸ்தரை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றை இந்த வருட நடுப்பகுதியில் கலைப்பதற்கான பிரேரணையை சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவது தொடர்பிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டம் ஆராய்ந்து வருகிறது.


இந்த ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் பெரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கம் மற்றும் மக்களுக்கு சலுகைகளை அறிவிப்பதுடன், கிராமிய அபிவிருத்தித் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்புவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிய அரசு அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜக்கிய மக்கள் முன்னணியின் மாநாட்டில் வைத்து நேற்றுத் தெரிவித்திருந்தார்.


இதேவேளை, வரும் ஜனவரிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டும் என்பதுடன், அதற்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவும் திட்டமிடப்பட்டது.

No comments