வகன விபத்து ஓட்டுநர் பலி!

மட்டக்களப்பு மாவட்டம் தாழங்குடா, மண்முனை பிரதான வீதியில் கெப் ரக வாகனமும் உந்துருளி ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 44 வயதுடைய எம்.ஜெயக்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments