மக்கள் விமர்சித்தால் எதிர்கொள்ள தயார்:டக்ளஸ்!


மக்கள் தரப்பில் இருந்த எதுவித உள்நோக்கமும் இன்றி என்னை விமர்சிக்கும் எவரது விமர்சனத்தையும் ஏற்க நான் தயாராகவே இருக்கின்றேன். ஆனால் அரசியல் தேவைகளுக்காகவும் தமது சுயநலன்களுக்காகவும் விமர்சனங்களை முன்வைத்தால் அதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என டக்ளஸ் புதிய விளக்கமளித்துள்ளார்.

மக்களுக்கு ஆரோக்கியமான முறையில் யாரையும் விமர்சிக்கும் உரிமை உண்டு. ஆனால் இதர தமிழ் அரசியல் தரப்பினர் தமது சொந்த நலன்களுக்காகவும் அரசியல் இருப்புக்காகவும் எம்மை நோக்கி விமர்சனம் முன்வைக்கும் போது அல்லது விமர்சிக்கும் போது முதலில் அவர்கள் தம்மை தாமே திருத்திக்கொண்டு எம்மீது விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான முடிவுகளை எட்டமுடியும்.

நான் இந்துகலாசார அமைச்சராக இருந்தபோது வடக்கில் யுத்தத்தால் அழிந்துகிடந்த குறிப்பாக அன்று புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆலயங்களையும் மீளவும் புனரமைத்து கட்டியெழுப்பவென பல ஆயிரம் கோடி நிதிகளை பெற்றுக்கொடுத்து அழிந்துகிடந்த சமய தலங்களை மீளவும் புத்தாக்கம் செய்திருந்தேன் எனவும் டக்ளஸ் விளக்கமளித்துள்ளார்.

No comments