டிரம்ப்பும், கிம்மும் கைகுலுக்கிக்கினர்!

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் இன்று ஹனோயில் சந்தித்துக் கைகுலுக்கிக் கொண்டுள்ளனர்.

அவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து அவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து 8 மாதங்கள் ஆகிவிட்டன.

இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பில், முழுமையான அணுவாயுதக் களைவுக்கு வடகொரியா இணங்கினால் அது செழிப்படைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக, அதிபர் டிரம்ப் தமது Twitterஇல் பதிவுசெய்திருந்தார்.

வடகொரியாவின் அணுவாயுதக் களைவுக்கான நடவடிக்கையில் மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டிருந்தாலும், திரு கிம்முடன் மீண்டும் பேச்சு நடத்துவதைத் தாம் எதிர்பார்த்திருந்ததாக அதிபர் டிரம்ப் அதில் குறிப்பிட்டிருந்தார்.

No comments