பொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்!

பொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

வவுனியாவில் இன்றுடன் 694 நாள்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மதியம் 12 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு, பசார் வீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை சென்று போராட்ட இடம் நோக்கிச் சென்றனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமொிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளைத் தாங்கியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.No comments