சென்னையில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் பிறைசூடி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள்
பிரித்தானியா கப்பல் போக்குவரத்துச் சேவையில் கப்பல் அதிகாரியாக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்போரின் முன்னோடிகளில் ஒருவராக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடன் இணைந்து தொடக்ககாலங்களில் இருந்தே விடுதலைப்போரில் பங்குகொண்டு பணியாற்றினார்.
1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதன் முதலாகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்காக வணிகக் கப்பல் நிறுவனத்தை உருவாக்கியோதொடு மட்டுமல்லாது எமது அமைப்பின் அனைத்து கப்பல் போக்குவரத்துக்களும் இவர் மேற்பார்வையிலையே நடந்தது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் பங்குகொண்டு சிறைவாசம் கண்ட பிறைசூடி அவர்கள் தன் இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைக்காகவே வாழ்ந்தார். இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருடன் நாமும் இணைந்துகொள்வதுடன் அமரர் கனகசபை பிறைசூடி அவர்களிற்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிக்கப்படுகின்றது.
''புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்''
அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழவிடுதலைப் புலிகள்.
Post a Comment