இரணைமடுவிற்கு புதிய விசாரணைக்குழுவாம்?


இரணைமடு குளத்தின் நீர்மட்டத்தை பேணுவது தொடர்பில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் முறையாக செயற்படவில்லையென்ற குற்றச்சாட்டிற்கு புதிய விசாரணைக்குழுவை  புதிய ஆளுநர் சுரேன் இராகவன் நியமித்துள்ளார்.விசாரணைக்குழு எதிர்வரும்  2 வாரங்களுக்குள் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக அப்போதைய வடமாகாண ஆளுநராக இருந்த ரெஜினோல்ட் கூரே யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் சிவகுமாரன் தலைமையில் மூவர் கொண்ட விசாரணைக்குழுவொன்றை நியமித்திருந்தார்.

எனினும் சிறிது நேரத்தில் இரவோடிரவாக குழுவிற்கு தலைமை தாங்கிய சிவகுமாரன் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதுடன் விசாரணைக்கழு முடக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது புதிய ஆளுநர் பதவியேற்றுள்ள நிலையில் அவர் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சந்திப்பினை நடத்தியிருந்தார்.

அப்போதே இரணைமடு குளத்தின் நீர்மட்டத்தை பேணுவது தொடர்பில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் முறையாக செயற்படவில்லையென்ற குற்றச்சாட்டிற்கு புதிய விசாரணைக்குழுவை  நியமித்து அறிவிப்பு விடுத்துள்ளார்.


No comments