கொழும்பு தொடங்கியது:பறிபோகும் எல்லை கிராமங்கள்!


கொழும்பு அரசியல் குழப்பங்கள் ஓய்ந்த பின்னராக மீண்டும் முனைப்புடன் தமிழ் மக்களது எல்லைக்கிராமங்கள் நோக்கி சிங்கள இனவாத அரசின் நிர்வாகம் நகரத்தொடங்கியுள்ளது.

அவ்வகையில் ஒருபுறம் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை இலங்கை இராணுவத்திற்கு சுவீகரிக்கும் நடவடிக்கை இன்று காலைவேளை இடம்பெற்றிருந்தது.அரச நிலஅளவை திணைக்களத்தால் மாவீரர் துயிலுமில்ல காணியினை நில அளவை செய்து கொடுப்பதற்கான முயற்சிகள் நடந்திருந்தது.

அரசினது இந்நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஒன்று  திரண்டு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இதே போன்று வவுனியா வடக்கின் மற்றொரு எல்லைக்கிராமமான வெடுக்குநாறி மலைப்பகுதியில் இன்றைய தினம் தொல்லியல் திணைக்கள சிங்கள அதிகாரிகள் கட்டுமானப்பணிகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருபுறம் போர்க்குற்றவாளி  சவேந்திரசில்வாவினை படைகளின் பிரதானியாக்கும் மைத்திரி ஒருபுறமும்  மறுபுறம் ரணில் தனது அமைச்சரவையின் கீழுள்ள திணைக்களங்களை தமிழர் பிரதேசங்களில் அவிழ்த்துவிடும் பரிதாபம் அரங்கேற தொடங்கியுள்ளது.  

No comments