யாழில் புதியவகை டெங்கு வைரஸ்?


யாழ் குடாநாட்டில் அச்சத்தை தரும் வகையிலான அசாதாரணமான நுளம்புகளின் பெருக்கம் மற்றும் அதிகரித்து வரும் டெங்கு நோயின் தாக்கம்  பற்றிய அவசர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அண்மையில் ஏற்பட்ட டெங்கு நோயாளி ஒருவரின் மரணம் மற்றும் பருவப் பெயர்ச்சிக் காலநிலையின் பின்னர் ஏற்பட்டுள்ள தாக்கம்; தொடர்பான விசேட அவசரக் கூட்டம் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளர் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் சுகாதாரத் திணைக்கள, பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர் மற்றும் உள்ளுராட்சித் திணைக்களங்கள் என்பவற்றின் பணிகளை மேலும் முன்னேற்றுவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

பொதுமக்கள் கூடிய அக்கறையுடன் தமது வளவுகளிலும் வீடுகளின் உள்ளும் நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

இதுவரை காலமும் இலங்கையில் இல்லாத புதிய வகையான டெங்கு வைரஸ் தற்போது இலங்கையில் காணப்படுவது தொடர்பாகவும் இது அதிகரித்த இறப்பு வீதத்தினை ஏற்படுத்தக் கூடும் என்றும் கவலை கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments