தென்மராட்சியில் விபத்து! மூவர் பலி!

தென்மராட்சி, பளை-இயக்கச்சிப் பகுதியில் இராணுவ டிரக் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பளைப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தாயைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடரிபில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments