பிரமுகர் கொலை சூழ்ச்சி விசாரணைகளை திசைதிருப்ப சதி - வாசு


நாமல் குமாரவால் அம்பலப்படுத்தப்பட்ட ‘பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி ‘ தொடர்பான விசாரணைகள் முதலில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மஹிந்த ஆதரவு அணி எம்.பியான வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று ( 07) நடைபெற்ற சோஷலிஸ மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

“ நாமல் குமாரவுக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவரால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி குறித்தான விசாரணைகளை முடிப்பதற்கு முன்னர், போலி ஆவணங்களை சமரப்பித்து நாமல் குமார இராணுவத்தின் இணைந்தார் எனக் கூறப்படுவது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமானால் அதன் பின்னணியில் சதித்திட்டம் இருக்கலாம் என்றே நம்ப வேண்டும்.

நாமல் குமாரவினால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை நடத்தி முடிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அவர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வது சாட்சிகளை வலுவிழக்கச்செய்யும் செயலாகும்.

அதனால் நாமல் குமாரவுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதுடன், பொலிஸாரின் விசாரணைகளில் அழுத்தங்கள் இல்லாமல் அவர் விசாரிக்கப்பட வேண்டும்” என வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments