யாழ் பல்கலை மாணவி சடலமாக மீட்பு

யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியின் சடலம் இன்று காலை நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீட 2 ஆம் வருடத்தில் கல்வி கற்ற சிறீதரன் கோகிலமதி என்ற 22 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் காதலன் ஒரு மாதத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மனவிரக்திக்கு உள்ளாகியிருந்த மாணவி  தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணையை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments