தமிழர்களைக் கைவிட்ட ஐ.நா போர்க்குற்றவாளிகளுக்கு மட்டும் குரல் கொடுக்கிறது

முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்போது இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்த ஐக்கிய நாடுகள் சபை 10 வருடங்களாகியும் இதுவரை சிறிலங்கா அரசாங்கத்தைத் தண்டிக்கத்தயாரற்றிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு சிறிலங்காப் படையினர், கொல்லப்பட்ட சம்பவத்தை போர்க்குற்றம் என அறிவித்திருக்கிறது.

குறித்த சம்பவத்தை ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்க்குற்றவாளிகளான சிறிலங்கா படையினரும் அதிகாரிகளும் பொதுவெளியில் சுற்றித்திரிய அனுமத்தித்ததோடல்லாமல் போர்க்குற்றவாளிகளான சிறிலங்காப் படையினரை ஐநா சமாதனப்படைக்கு உள்ளாங்கிய ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகள் கண்ணிவெடித் தாக்குதலில் இறந்த சம்பவத்தை போரதூரமான போர்க்குற்றம் என வர்ணித்திருக்கிறது.

மாலியின் மத்திய பகுதியில் உள்ள டோன்ட்சா என்ற இடத்தில் நடந்த இந்த தாக்குதலில் கப்டன் உள்ளிட்ட இரண்டு இலங்கைப் படையினர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இலங்கை அரசுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. அமைதிப்படையினரை இலக்கு வைக்கும் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களின்படி போர்க்குற்றங்களாகக் கருதப்படும் என்று கூறியுள்ள ஐ.நா. பொதுச்செயலர், இந்தத் தாக்குததலின் சூத்திரதாரிகளை அடையாளம் கண்டு விரைவில் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று மாலி அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

No comments