ஐங்கரநேசனோடு ஆயுள்முடிந்து போனதா ?

யாழ். நாவற்குழி வீதி . வல்லை வெளி பருத்தித்துறை வீதிகள் இரு மருங்கிலும் நடப்பட்ட நிழல் தரு மரங்கள் பராமரிப்பின்றி அழிவடைந்து வருகின்றன.

கடந்த வடமாகாண சபையின் விவசாய அமைச்சினால் பலகோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட மரநடுகை திட்டத்தின் மூலம் யாழில் இந்த மரங்கள் நடப்பட்டன. வடக்கு மாகாண விவசாய அமைச்சராக ஐங்கரநேசன் இருந்த காலப்பகுதியில் குறித்த மரங்கள் நடப்பட்டிருந்தன.

இடையில் அவரது பதவி பறிக்கப்பட்டது. அதன் பின் மரநடுகையில் தொங்கு நிலை ஏற்பட்டதோடு பராமரிப்பும் மந்தகதி நிலைக்கு சென்றிருந்தது. தற்போது மரங்களில் பராமரிப்பு முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளது.

தற்போது வடமாகாண சபையின் ஆயுள் காலம் முடிவடைந்துள்ள நிலையில் நடப்பட்ட மரங்களின் ஆயுள்காலமும் முடிவடைந்துவிட்டதா என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

இந்த மரநடுகைத் திட்டத்துக்கு பல இலட்சம் நிதி செலவிடப்பட்டும் மரங்களை பராமரிப்பின்றி விவசாய அமைச்சு கைவிட்டுள்ளது. இதனால் மரங்கள் அழிவடைந்து வருகின்றன.

 இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து மீதமாகவுள்ள மரங்களை பாதுகாக்குமாறு மக்கள் கேட்டு நிற்கின்றனர்.

No comments