வல்வெட்டித்துறையில் கஞ்சாவியாபாரத்தில் சிக்கிய அரசியல் பிரபலம்

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் 110 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் வல்வை மகன் என அழைக்கப்படும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை சண்முகவேல் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் கடந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டிருந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழரசுக் கட்சி நடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் தனது கட்சி ஆதரவாளரான பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரை தனது தலையீட்டினால் பொலிசாரிடமிருந்து விடுவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அரசியல்வாதிகளே கஞ்சாவியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் கஞ்சாவினை எவ்வாறு ஒழிப்பது என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

No comments