பிரித்தானியாவில் ஈழ உணர்வாளனின் இறுதிப் பயணம்

தமிழீழ தேசத்தின் விடுதலையை நேசித்து, பிரித்தானிய மண்ணில் தாயக விடுத லைக்காக பணியாற்றிய அற்புத மனிதரை நாம் இழந்துவிட்டோம்.
அமரர் சிவானந்தம் அவர்கள் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்துவமான மனிதர். நேர்மையுடன், நெஞ்சுறுதியுடன் மனித நீதிக்காக குரலெழுப்பி வந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தி உலக அரங்கில் குரல்கொடுத்து வந்தார். பிரித்தானிய மண்ணில் இடம்பெறும் தாயக நிகழ்வுகளில் நடிகனாக, பேச்சாளனாக தனது வயோதிபத்தையும் பொருட்படுத்தாது அரும்பணியாற்றியுள்ளார்.
அமரர் சிவானந்தம் அவர்கள் ஒரு உயரிய தேசப்பற்றாளர். தமிழீழ தாயகத்தில் ஆழமான பாசம் கொண்டவர். தமிழர் தேசம் தன்னாட்சி உரிமை பெற்று சுதந்திர நாடாக உருவாகவேண்டுமென ஆவல் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், இயக்கத்தின் கொள்கைகளையும் ஆதரித்தவர். கனிவான பேச்சுடன் அனைவரையும் அரவணைக்கும் பண்பாளர். அன்னார் தமிழீழ தேசத்திற்காக ஆற்றிய அரும்பணிகள் மிகவும் பாராட்டத்தக்கன.
'உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்து விடுவதில்லை', புலம்பெயர் தேசத்திலும் தாயக மண்ணிலும் அமரர் சிவானந்தம் அவர்களின் பெயர் நீங்காது நிலைத்திருக்கும்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
'தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்'


No comments