ஆளுநர்களை அழைத்தார் மைத்திரி?


இலங்கையின் அனைத்து மாகாணங்களிற்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை இலங்கை ஜனாதிபதி இன்று தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார்.ஆளுநர்களுடனான கூட்டமொன்றினை நடத்தியுள்ள இலங்கை ஜனாதிபதி போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதனிடையே கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் தலைப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்தன.

ஆளுநர் பதவிக்கு பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் இந்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

No comments