மூவாயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொலிஸிற்கு 8 வருட கடூழியச் சிறை

மூவாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 8 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் குற்றத்திற்காக சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் 3,000 ரூபா இலஞ்சம் பெற்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் இன்று தீர்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கே, 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

No comments