முன்னாள் போராளி ஒருவர் பளைப் பகுதியில் கைது

பளை – கரந்தாய் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரந்தாய் பகுதியில் உள்ள முன்னாள் போராளியில் வீட்டைச் சோதனைக்குட்படுத்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸார், அங்கிருந்து கைத்துப்பாக்கி ஒன்று, கட்டுத்துவக்கு ஒன்று, 150 ரவைகளைக் கைப்பற்றினர் என்று கூறப்படுகின்றது.

இதையடுத்தே, 40 வயதுடைய, முன்னாள் போராளியான சுமன் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவராவார்.

No comments