ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணையாம்?

போரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வரும் இரண்டு வாரங்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெமசிறி நாணயக்கார தெரிவித்தார்.

11 படையினருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், அதன் பின்னரும் குற்றமிழைத்த படையினரை அரசு பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டை புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்க்ககூடாது. போரின் போது குற்றமிழைத்தவர்கள் என்று அடையாளம் காணும் இராணுவத்தினர் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் தகவல்களை வழங்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்.

அவர்களால் இனங்காட்டப்படும் படையினர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

பாதுகாப்புப் படைகளில் உள்ள அனைவரும் போர் வீரர்கள் இல்லை. கொலை செய்யும் எந்தவொரு இராணுவச் சிப்பாயும் போர் வீரர் அல்ல.
ரணவிருவோ விருதினைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே போர் வீரர்களாக அழைக்கவேண்டும். அனைத்து படையினரையும் போர் வீரர்களாக அழைப்பதை அனைவரும் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதனை பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்களும் பின்பற்றவேண்டும்.

பாதுகாப்புப் படைகளில் 39 ஆயிரம் படையினரே ரணவிருவோ விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களில் 34 ஆயிரம் பேர் இராணுவத்திலும் 4 ஆயிரத்து 400 பேர் கடற்படையிலும் 868 பேர் விமானப் படையிலும் உள்ளனர். 5 லட்சம் படையினரில் சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே போர் வீரர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே பாதுகாப்புப் படைகளில் இணைந்து 3 மாதங்கள் பயிற்சியைப் பெற்றவர்களும் இப்போது தம்மை போர் வீரர்களாகக் கூறிக்கொள்கின்றனர். நான் பதவியேற்ற பின் இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன்.
போரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினர் வரும் இரண்டு வாரங்களில் விசாரணைக்குட்படுத்தப்படுவர் – என்றார்.

ணவிருவோ விருதினைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே போர் வீரர்களாக அழைக்கவேண்டும். அனைத்து படையினரையும் போர் வீரர்களாக அழைப்பதை அனைவரும் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதனை பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்களும் பின்பற்றவேண்டும்.

பாதுகாப்புப் படைகளில் 39 ஆயிரம் படையினரே ரணவிருவோ விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களில் 34 ஆயிரம் பேர் இராணுவத்திலும் 4 ஆயிரத்து 400 பேர் கடற்படையிலும் 868 பேர் விமானப் படையிலும் உள்ளனர். 5 லட்சம் படையினரில் சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே போர் வீரர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே பாதுகாப்புப் படைகளில் இணைந்து 3 மாதங்கள் பயிற்சியைப் பெற்றவர்களும் இப்போது தம்மை போர் வீரர்களாகக் கூறிக்கொள்கின்றனர். நான் பதவியேற்ற பின் இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன்.
போரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினர் வரும் இரண்டு வாரங்களில் விசாரணைக்குட்படுத்தப்படுவர் – என்றார்.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் மார்ச் இறுதியில் இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments