வடக்கு கிழக்கு பாடசாலைகளுக்கு திங்கள் விடுமுறைதைப்பொங்கல் தினத்தை முன்னிட்டுஇ கிழக்கு மாகாண பாடசாலைகளுக்குஇ திங்கட்கிழமை (14) விடுமுறை வழங்கப்படும் எனஇ கிழக்கு மாகாண ஆளுநர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்இ கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் இந்த விடுமுறை வழங்கப்படும் என்றும் இந்த விடுமுறை தினத்துக்குப் பதிலாகஇ எதிர்வரும் 19ஆம் திகதி (சனிக்கிழமை) பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் தினம் என்பதால் அதற்கு முதல் நாள் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக அடுத்துவரும் வார இறுதி நாள் ஒன்றில் பாடசாலையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் கூறியுள்ளது.

No comments