சிங்களவர்களை தொடர்ந்து முஸ்லீம் மீனவர்கள்?


மீண்டும் மணலாற்றின் கடற்பகுதிகளை தென்னிலங்கை சிங்கள மீனவர்களை தொடர்ந்து தற்போது புல்மோட்டை முஸ்லீம் மீனவர்களும் சூறையாடத்தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக கொக்குளாய் முதல் கொக்குத்தொடுவாய் இடையிலான களப்பு பகுதியில் உள்ளூர் மீனவர்களின. வாழ்வாதாரத்திற்கு இடையூறாக புல்மோட்டை மீனவர்கள் கூட்டுவலைத் தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

உள்ளுர் மீனவர்கள் தினமும் தொழிலிற்குச் சென்று வலைகளை கடலில் போட்டுவிட்டு கரைதிரும்பி மறுநாள் சென்றால் புல்மோட்டை மீனவர்கள் உள்ளுர் மீனவர்களின் வலைகளை அறுத்து உள்நுளைந்து கூட்டுவலை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

எனினும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் கருத்து வெளியிடுகையில் தற்போது நந்திக்கடலில் கூட்டுவலைத் தொழிலில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட பலர் தப்பியோடியபோதும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேநேரம் 70 கூட்டு வலைகள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட வலைகளை மன்றில் முற்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

No comments