Header Shelvazug

http://shelvazug.com/

மைத்திரிக்கு துரோகமிழைக்கவில்லை: குரே?


இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கட்சியை உடைக்க சதி செய்யவில்லையென முன்னாள் வடக்கு ஆளுநர் குரே மறுதலித்துள்ளார்.

தனது வீட்டில் சுதந்திரக்கட்சிக்கு எதிரான அணியின் கலந்துரையாடல் நடந்தது என்ற தகவலை, வடக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் குரே மறுத்துள்ளார். 

இது தொடர்பில் வடக்கு ஆளுநர் பதவி பறிப்பு தொடர்பில் குறித்த சதி தொடர்பில் பதிவு இணையம் அம்பலப்படுத்தியிருந்தது.

அந்த கலந்துரையாடல் குறித்த அனைத்து விடயங்களையும் உடனடியாக எஸ்.பி.திசநாயக்காவிற்கு தெரிவித்திருந்ததாகவும், அது சூழ்ச்சிக் கலந்துரையாடல் அல்லவென்றும் மறுத்துள்ளார்.

“ரெஜினோல்ட்டின் வீட்டில் சுதந்திரக்கட்சியின் 18 உறுப்பினர்கள் கூடி, கட்சியை பிளவுபடுத்த இரகசிய கூட்டம் நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. எனது வீட்டில் அவ்வாறான குழுவொன்று சந்திக்க நான் இடம்வழங்கியது, பொய் இரகசியங்களை மறைத்து சூழ்ச்சியொன்று செய்வதற்கு அல்லவென உறுதியாக கூறுகிறேன். அப்படியான இரகசிய கூட்டத்திற்கு பிரபலமான இடத்தை வழங்க, நான் சிறு குழந்தையல்ல. சூழ்ச்சியொன்றை நடத்துவதென்றால், அந்த கூட்டத்திற்கு வந்தவர்களிடம் நான் கையெழுத்துக்களை பெற்றிருப்பேனா, இல்லையா?

அந்த கலந்துரையாடல் தொடர்பாக அன்றைய தினமே எஸ்.பி.திசநாயக்காவிடம் ஒளிவுமறைவின்றி நான் தெளிவுபடுத்தினேன். சூழ்ச்சியொன்று இல்லாததன் காரணமாகவே, எதனையும் நான் மறைக்கவில்லை. ஜனாதிபதியால் இது குறித்து வினவப்பட்டபோதும், எவ்வித மறைவுமின்றி அனைத்தையும் நான் சொன்னேன்.


2018 டிசம்பர் 18ம் திகதி மாலை 3.15 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பித்தவுடன், ஜனாதிபதி அது குறித்து அறிந்து கொண்டார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை விட்டு செல்ல மாட்டேன் என்பதையும், கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதிர்கொள்ளும் அனைத்து சவால்களின்போதும், அவரை கைவிடாது அவருடன் இருப்பேன் என்பதையும் நான் அறியத் தருகிறேனெனவும் குரே தெரிவித்துள்ளார்.