சுமந்திரன் தன்னை பரிசோதனை செய்வது நல்லது?
இலங்கை மதச் சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்பதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாடாகத்திட்டவட்டமாகக் கொண்டிருக்கின்றதென தெரிவித்துக்கொண்டிருந்த எம்.ஏ.சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் கருத்துத்தெரிவிக்கும்போதும் வவுனியாவில் கருத்துத் தெரிவிக்கும்போதும் புதிய அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என கூறியிருப்பதை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவனின் நாளிதழான உதயன் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பௌத்தத்துக்கு முதலிடம் என்று சொல்லப்படுவதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லையில்லையென சுமந்திரன் தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பத்திரிகை இப்படி மூன்றரை வருட காலத்துக்குள் முன்னுக்குப் பின்னர் முற்றிலும் முரணாகக் கருத்துச் சொல்லுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்தான் ‘‘ஏக்கிய ராஜ்ஜிய’’ என்றால் ஒற்றையாட்சி இல்லை என்று 100 தடவைகளுக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன், ஆனால் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என்றும் விமர்சித்திருக்கிறார்.
ஒரு மதத்துக்கு முக்கியத்துவம் வழங்குவதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியவர், அதுவும் புதிய அரசமைப்பில் அதுதான் கட்சியின் நிலைப்பாடு என்று கூறியவர், எந்தச் சந்தடி சத்தமும் இன்றி பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றும் கூறுகின்றார்.
அதுபோன்று இன்னும் சில காலங்களின் பின்னர் ஏக்கிய ராஜ்ஜிய என்பதை ஒற்றையாட்சி என்று என்றோ நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோமே என்று கூறமாட்டார் என்பது நிச்சயமல்ல என்பதால், ஊடகங்கள் பரந்துபட்ட புரிதலுக்குரியதையே தொடர்ந்தும் பேசுகின்றன. எனவே ஊடகங்களை விமர்சிப்பதற்கு முன்னர் அரசியல்வாதிகள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்வது சிறந்ததெனவும் அது தெரிவித்துள்ளது.
Post a Comment