மேலும் சில இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று பதவியேற்பர்

ஐக்கிய தேசிய முன்னணி அரசில் மேலும் சில இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.

இந்தப் பதவியேற்பு இன்று காலை  ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெறும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலருக்கும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் சிலருக்கும் எந்தவொரு பதவி நிலையிலும் வழங்கப்படாததால் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்குள் குழப்பநிலை நீடித்தது.

அதுதொடர்பில் ஆராயப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை ஆசன உறுப்பினர்களின் ஆலோசனையின் பிரகாரம் நாளை மேலும் சில இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

No comments