பெற்றோல் டீசல் விலை 2 ரூபாவால் குறைப்பு

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று (11) வெள்ளிக்கிழமை அதிகாலை அமுலுக்கு வரும்வகையில் குறைக்கப்படுகிறது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. .

பெற்றோல் 92 மற்றும் 95 ஒக்ரைனின் விலை 2 ரூபாவாலும் டீசலின் விலை 2 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவாலும் குறைக்கப்படுகிறது.

இதன்மூலம் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை 123 ரூபாவாகும் 95 ஒக்ரைன் 147 ரூபாவாகவும் ஓட்டோ டீசலின் விலை 99 ரூபாவாகும் சுப்பர் டீசலின் விலை 118 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

No comments