சர்வதேச மத்திய நிலையம் தொடங்கும் மகிந்த


சர்வதேச உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளார்.

சர்வதேச உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்குவதற்கான ஆவணங்களில், மகிந்த ராஜபக்ச கடந்த 29ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் பங்கேற்றுள்ளார்.

சர்வதேச உறவுகள், இராஜதந்திரம் மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக்கான உலகத்துக்குள் நுழைவதற்காக முதல் படியாக இந்த நிறுவகம் இருக்கும் என்றும் மகிந்த ராஜபக்ச தனது கீச்சகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

No comments