மலையக தொழிலாளர்களிற்கு ஆயிரமல்ல!ஆயிரத்து 200?


வடகிழக்கு மாகாண மக்களின் குறைகள் அடிப்படையில் அரசியல் சார்ந்தது; உரிமைகள்  சார்ந்தது; உரித்துக்கள் சார்ந்தது. அதற்காகப் பொருளாதாரம் சார்ந்ததில்லை என்று கூறவரவில்லை. ஆனால் மலையகத் தமிழ் மக்களின் குறைகள் பெரும்பாலும் பொருளாதாரமே சார்ந்தது. வடகிழக்குமாகாணமக்களின் உரிமைகள் கோரிபயணிப்பது ஒரு பாதை. மலையக மக்களின் பொருளாதாரவிருத்தி நோக்கிப்பயணிப்பது பிறிதொரு பாதையென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மலையகத் தொழிலாளர்கள் சார்பில் குரல் கொடுக்க நாம் தயாராக உள்ளோம். ஆனால் குரல் கொடுத்தால் மலையகக் கட்சித் தலைவர்களும் தொழிற் சங்கத் தலைவர்களும் கூறுவார்கள் “உமக்கேன் இவ்வளவு கரிசனை?”என்று.“விக்னேஸ்வரன் மலையகத் தமிழ் மக்களின் விடயங்களில் அநாவசியமாக உள்ளிடுகின்றார். அவர் மலையகத்தில் தமது கட்சியைப் பிரபல்யப்படுத்தப்பார்க்கின்றாரோ”என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவார்கள். இதனால்த்தான் நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளியிடாது அவர்கள் மீது அனுதாபத்துடன் பயணிக்கின்றோமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சம்பளத்தில் ஒரு தொகை தொழிற்சங்கங்களுக்கு சந்தாப் பணமாககட்டப்படுகிறது. எனினும் தொழிலாளர்கள் கண்டமிச்சம் அந்தப் பணத்தைவைத்துக் கொண்டுகட்சிகளும் தொழிற் சங்கங்களும் தமதுஆணவப் போர்களில் ஈடுபட்டுக் கொண்டுவருகின்றார்கள். அரசியல் முரண்பாடுகளில் உழன்றுகொண்டு இருக்கின்றார்கள். மலையகக் கட்சிகள் பலவற்றின் தலைவர்கள் என் அன்புக்குரியவர்கள். ஆனால் அவர்களின் ஒற்றுமையற்றசெயற்பாடுகள் என் மனதைவருத்துகின்றது. 

சுகல கட்சிகளின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து தமது மக்கள் நலத்தை முன்னிட்டு தோட்ட முதலாளிமார்களுடனும் அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் பேசவேண்டும். அல்லது எல்லோரும் சேர்ந்து ஒருசிரேஸ்ட சட்டத்தரணியைப் பேசவிடவேண்டும். பேச முதல் கடந்த பத்து வருடதோட்டக் கணக்குகளை எம்மவர் மிகநுணுக்கமாகப் பரிசீலிக்கவேண்டும். உண்மையில் அவர்கள் ரூபா 1000 நாட் சம்பளத்தைக் கொடுக்க முடியாதநிலையில் உள்ளார்களா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் கணக்குகள் கரவாகத் தயாரிக்கப்படுகின்றன. செலவுகளைப் பெருப்பித்து தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை என்று கூறப்படுகிறது என்றே நம்பவேண்டியதாய் உள்ளது. மலையகத் தமிழர்களுக்கு உண்மையில் நாளாந்தம் ரூ 1200ஃஸ்ரீஐயாவதுகொடுக்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments