யாழ்-சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ் மாநகர சபை திடலில் ஆரம்பமாகின்றது.

இந்தக் கண்காட்சி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும். வடக்கின் நுழைவாயில் என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக 10வது தடவையாகவும் கண்காட்சி ஏற்பாடாகியுள்ளது.

இதன் அங்குரார்ப்பண வைபவம் இன்று காலை 10.00 மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது. யாழ் மாநகர சபை மேயர் இமானுவெல் ஆர்னெல்ட் பிரதமர் அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இதில் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments