தமிழரசும் தேர்தலிற்கு கச்சைகட்டுகின்றது?


தமிழரசுக்கட்சியும் தேசிய மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளதாக அறிவித்திருக்கின்ற நிலையில் விக்கினேஸ்வரன்,அருந்தவபாலன்,அனந்தி,சிவகரன் உள்ளிட்டவர்களை கட்சியை வீட்டு நீக்கவும் முடிவு செய்துள்ளதாம்.

ஏதிர்வரும் மார்ச் 22 ,23 , 24 யாழ்ப்பாணத்தில் தேசிய மாநாடு , ரணிலின் வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணிக்காக மாவட்டம் தோறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நேற்றைய தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டம் நேற்றைய தினம் கொழும்பு பிறைற்றின் விடுதியில் கட்சியின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது. 

தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய புளட் அமைப்பைச் சேர்ந்த வியாழேந்திரனை தமது கட்சியில் இருந்து நீக்குவதாக புளொட் அறிவித்தமையினால் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை தமிழ் அரசுக் கட்சியும் புளட் அமைப்பும் இணைந்து ஆரம்ப விசாரணைக்கு உட்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.

இதேநேரம் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்த முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதன்போது கட்சியில் இருந்து பிரிந்து வேறு கட்சியில் அங்கம் வகித்தால் உறுப்புறுமை நீக்கப்படும் என்ற அடிப்படையில் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அருந்தவபாலன் உள்ளிட்டோரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டதாம்.

No comments