அடிமுடியற்று நீண்டுசெல்லும் மன்னார் புதைகுழி!


மன்னார் புதைகுழியின் விஸ்தீரணத்தை கண்டறிய அகழ்வுப்பணிகள் தற்போது  முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை  225 ஆவது நாளாக வளாகத்தின் வெளிப்பகுதிகள் அனைத்தும் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு அகழ்வுகள் இடம்பெறுகின்றன.குறிப்பாக அருகாகவுள்ள கடைததொகுதிக்கு செல்லும் பாதையின் கீழும் புதைகுழி நீண்டு செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பாதைக்கு அப்பாலுள்ள பகுதியென நீண்டு செல்லும் குறித்த புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளவர்களது எண்ணிக்கை பலநூற்றுக்கணக்கில் இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. 

கடந்த ஒரு வார காலமாக வளாகத்தில் அடையாளப்படுத்தும் மற்றும் அப்புறப்படுத்தப்படும் பணிகள் குறைக்கப்பட்டு விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் இடம் பெற்றன. 

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியின் சதோச வளாகத்துக்கு அருகாமையில் உள்ள கடை தொகுதிக்கு செல்லும் ஒரு பகுதி மூடப்பட்டு விரிவுபடுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.

விரிவுபடுத்தப்படும் பகுதிகளிலும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது வரை 282 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 277 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments