டாணிற்காக காவல்நிலையம் செல்லும் ஆனோல்ட்?


யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமாக இயங்கும் டாண் தொலைக்காட்சிக்கு ஆதரவாக கட்டைப்பஞ்சாயத்தில் இறங்கிய யாழ்.மாநகர முதல்வர் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாது இழுத்தடிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.காவல்;நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, இன்று (15) காலை 11 மணிக்கு, விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இன்றுச் சமூகமளிக்கவில்லை. நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தை விட்டு வெளியே பயணமொன்றை மேற்கொண்டிருந்நதன் காரணமாகவே, அவர், விசாரணைகளுக்கு சமூகமளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நேற்று  (14), முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில், கேபிள் கம்பங்களை அகற்றும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உண்மையில் முன்னாள் அமைச்சரான அங்கயன் இராமநாதனின் கப்பிடல் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்பினை வழங்க நாட்டப்பட்ட கம்பங்களையே அகற்ற முயற்சிகள் நடந்திருந்தது.

தற்போது இராணுவ தரப்பினதும் சுமந்திரன் தரப்பினதும் ஆதரவுடன் இயங்கும் டாண் தொலைக்காட்சியே கேபிள் இணைப்பில் தனித்து கோலோச்சி வருகின்றது.
இந்நிலையில் அங்கயன் இராமநாதனின் கப்பிடல் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்பினை வழங்கிவிட்;டால் தமது ஏகபோகம் சரிந்துவிடுமென டாண் குகநாதன் கருதுகின்றார்.

இதனையடுத்து சுமந்திரன் ஊடாக ஆனோல்ட்டிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவையடுத்து அவரே நேரடியாக களமிறங்கி அங்கயன் இராமநாதனின் கப்பிடல் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்பு கம்பங்களை பிடுங்கியெறிய முற்பட்டுள்ளார்.

இதன்போது, சம்பவ இடத்துக்கு வந்த அங்கயனின் ஆதரவாளர்கள் தாங்கள் ஒரு நிறுவனமென்றும் தாங்கள் சட்டவிரோதமாக கேபிள் கம்பங்களை அமைக்கவில்லையென்றும் தெரிவித்து, முரண்பட்டுள்ளனர்.

அத்துடன், முரண்பட்டவர்கள், இது தொடர்பில், யாழ்ப்பாணம் காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில், மேயருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாகவே, மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments