இலங்கை சுதந்திர தினத்தில் வெளியேவரும் ஞானசாரதேரர்?


பௌத்த மத பீடங்களின் அழுத்தம் மற்றும் கட்சி வேறுபாடற்ற தரப்புக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஞானசார தேரர் எதிர்வரும் 4ம் திகதி இலங்கை சுதந்திர தினத்தன்று வெளியே வருகின்றார்.கடந்த காலங்களில் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்கு இடையில் இனக்கலவரங்களை தூண்டிய பொதுபல சேனா சிங்கள இனவாத அமைப்பின் தலைவரான அவர் இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருக்கிறார்.

இலங்கை சுதந்திர தினத்தன்று அவரை விடுவிக்கும் பணியில் இலங்கை ஜனாதிபதி மும்முரமாகியுள்ளார்.மறுபுறம் இவரை விடுவிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு புத்தசாசன அமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார்.

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இலங்கை அரசோ அரசியல் கைதிகளாக ஏற்று கொள்ள மறுத்துவருகின்றது.

வருடம் தோறும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதும் போலி வாக்குறுதிகள் வழங்கப்படுவதுமாக காலங்கள் கடந்து போகின்றன.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான மத்திய அரசின் பங்காளிகளாக பேசிக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடயத்தில் ஒருபுறத்தில் திருட்டு மௌனம் காத்தவாறு மறுபுறம் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அலையும் அவலம் தொடர்கின்றது.

No comments