முதலில் மாகாணசபை தேர்தலாம்:மைத்திரி அறிவிப்பு!


ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக இலங்கையிலுள்ள அனைத்து மாகாணசபைகளிற்குமான மாகாணசபைத்தேர்தலை நடத்த மைத்திரி திட்டமிட்டுள்ளார்.

தேர்தலுக்கு தயாராகுங்கள் என சுதந்திர கட்சி அமைப்பாளர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அது இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்விற்கு அவசரமில்லை நாட்டிற்கு தேவை தேர்தலேயென அஸ்கிரிய மல்வத்து  பீடாதிபதிகள் தெரிவித்துள்ள நிலையில் தேர்தலிற்கான வேகம் உத்வேகமடைந்துள்ளது.

முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுமென ஊகங்கள் வெளியிடப்பட்டுவந்த போதிலும் தற்போது மாகாணசபை தேர்தல்களை நடத்தி தனது ஆதரவு பலத்தை பரிசீலித்த பின்னர் ஜனாதிபதி தேர்தல் நோக்கி நகர மைத்திரி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments