தேவப்பெருமாவிற்கு டக்ளஸ் நற்சான்றிதழ்?


கிளிநொச்சியில் கிணறு கலக்கிய பிரதி அமைச்சர் தேவப்பெருமவிற்கு டக்ளஸ் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.ஒரு முன்னேற்றகரமான அல்லது மனதை நெகிழ வைக்கும் ஒரு நிகழ்ச்சியைத்தான் மகிந்த தேவப்பெரும செய்துள்ளார். மக்கள் சார்பில் என்னுடைய நன்றிகளையும் பாராட்டுகளையும் அவருக்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோலத் தான் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் அதை தங்களுடைய ஒரு முன்னுதாரணமாக செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு மக்களின் பெரும் உதவியுடன் ஓர் விசேட பேரூந்து வடக்கிற்கு பயணிக்கின்றது என கடந்த ஒரு வாரமாக பத்திரிகைகளில் விளம்பரம்படுத்தப்பட்டதற்கு அமைய குறித்த பொருட்களை கையேற்பதற்காக மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் இராணுவத் தளபதிகள் மற்றும் சகல பிரதேச செயலாளர் ஆகியோருடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர்களும் மாங்குளம் புகையிரத நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இவ்வாறு காத்திருந்த மாவட்டத்தின் நிர்வாகத்தினர் பல வாகனங்கள் சகிதமும் அவற்றினை எடுத்துச் செல்வதற்காக பல வாகனங்களும் அவற்றுடன் இராணுவத்தினரின் 4 ட்ரக் வண்டிகளும் எடுத்து வரப்பட்டிருந்தன.
இதன் பிரகாரம் தெற்கில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிய விசேட தொடரூந்து மாங்குளம் புகையிரத்த்தினை அடைந்ததும் விசேட வரவேற்புகள் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தொடருந்தில் ஏற்றிவரப்பட்ட பொருட்கள் இறக்கப்பட்டன. அவ்வாறு எடுத்துவரப்பட்ட பொருட்களில் ஆயிரத்து 400 கிலோ அரிசியும் 20 கேஸ் தண்ணீர் போத்தலும் மட்டுமே எடுத்து வரப்பட்டன. இவ்வாறு எடுத்து வரப்பட்ட பொருட்களின் உச்ச பட்ச பெறுமதியானது 3 லட்சம் ரூபாவிலும் விட குறைந்த பெறுமதியே கணிக்கப்படக்கூடியது. இதற்காக பல நாள் விளம்பரத்திற்கும் மாவட்ட ஒட்டுமொத்த நிர்வாகம் காத்திருக்க வெறும் டிராக்டர் ஒன்றுடன் பொருட்கள் அடங்கியிருந்தது.

இதே போன்று படம்பிடிக்க டக்ளஸ் கிளிநொச்சியில் காத்திருந்த வேளையே தேவப்பெருமாவிற்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சியிலும் வெறும் ஒரு பாரவூர்தி; பொருட்களுடன் நிவாரண புகையிரத சேவை முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments