துரத்திவருகின்றது டாண் விவகாரம்?


டாண் தொலைக்காட்சிக்கான கப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் கம்பங்களை பிடுங்கியமை தொடர்பில் யாழ் மாநகர மேயர் இ.ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் கம்பங்களை பிடுங்கியமை தொடர்பிலேயே விசாரணைக்குள்ளாகியுள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் அனைத்தும் யாழ்ப்பாண மாநகர மேயரால் அகற்றப்பட்டிருந்தன.

கேபிள் கம்பங்களை நாட்டிய நிறுவனத்தினரால் யாழ் மாநகர மேயருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர். அவர் விசாரணைக்கு சமூகமளிக்காத காரணத்தால், இன்று (16) பொலிஸாரால் யாழ்ப்பாண மாநகரசபை அலுவலகத்தில் வைத்து  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

No comments