இராணுவ ட்ரக் மோதி பொதுமக்கள் மூவர் பலி!


கிளிநொச்சி இயக்கச்சிப்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் பொதுமக்கள் மூவர் பலியாகியுள்ளனர்.இலங்கை இராணுவ ட்ரக் வண்டி முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரியவருகின்றது.

கடந்த வாரமும் இதே போன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொதுமக்கள் இயக்கச்சியில் உயிரிழந்தனர்.

விபத்தினையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு அமைதி பேணப்பட்டிருந்தது.

No comments