புகலிடம் கோரிய சவுதி அரேபிய பெண்ணை பொறுப்பேற்றது UNHCR!

தாய்லாந்தில் புகலிடம் கோரிய சவுதி அரேபிய பெண்ணை UNHCR இன்று(திங்கட்கிழமை) பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் தாய்லாந்திற்கு வந்ததாக கூறப்படும் இளம் பெண்ணை நாடுகடத்த போவதில்லை எனவும், அவர் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்தின் குடியுரிமைத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையிலேயே UNHCR பொறுப்பேற்றுள்ளது.
பதினெட்டு வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தனது குடும்பத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்ததாகவும் ஆனால் தாய்லாந்தில் தரையிறங்கியதும் சவுதி அதிகாரிகள் தனது கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும், பாங்கொக்கில் உள்ள சவுதி தூதரகம், அப்பெண்ணிடம் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான பயணச் சீட்டு இல்லை என்ற காரணத்திற்காகவே அவரது கடவுசீட்டினை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கடவுச்சீட்டு குறித்த பெண்ணிடமே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள குறித்த பெண் “தாம் சவுதி அரேபியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டால் எனது குடும்பத்தால் கொல்லப்படுவேன்” என அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

No comments