முல்லைதீவு சென்ற ஜநா மனித உரிமைகள் குழு?


இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை செயலக பிரதிநிதிகள் முல்லைத்தீவிற்கு இன்று விஜயம் செய்துள்ளனர். இனவழிப்பு போரில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான விடயங்கள் தொடர்பில் மீண்டும் இலங்கைக்கு எதிரான துரப்பு சீட்டை ஐக்கிய நாடுகள் சபை தூக்கிப்பிடித்துள்ள நிலையில் அதன் மனித உரிமை செயலக பிரதிநிதிகளது வடக்கிற்கான விஜயம் முக்கியத்துவம் மிக்கதாகியுள்ளது.

இதனிடையே முல்லைதீவு விஜயம் செய்த ஜநா குழுவினருக்கும் தமிழர் மரபுரிமைப் பேரவையினருக்கும் இடையில் முக்கிய சந்திபொன்று இடம்பெற்றுள்ளது. 

சந்திப்பின் போது பல்வேறு பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் தற்போதைய நாட்டின் நிலைமை மற்றும் கடந்த கால இனவழிப்பு போரில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான விடயங்கள் .அதற்கான தீர்வு கிடைக்காமை தொடர்பில் பேசப்பட்டதாக தமிழர் மரபுரிமைப் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பாக தற்போதைய அரசியல் சூழலிலும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் ஊடான இனவழிப்பு முன்னெடுக்கப்படுவது தொடர்பாக கூட்டிக்காட்டப்பட்டதாகவும் தமிழர் மரபுரிமைப் பேரவை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

No comments