சுதந்திரக்கட்சி;மொட்டு சண்டை உக்கிரம்


சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அல்லாதோர் சிலரால், நேற்றைய தினம் (13) ஊடகச் சந்திப்பொன்று நடத்தப்பட்டு, கட்சிக்கு எவ்வித முன்னறிவித்தலும் வழங்காமல் மேற்கொள்ளதமல் கருத்துகள் வெளியிடப்பட்டு உள்ளனவென்று, சு.கவின் ஊடகப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க எம்.பி தெரிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தால் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பிலும் அதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில், பல்வேறு தரப்பினரும் கருத்துகளை வெளியிட்டு வந்தமை தொடர்பிலேயே, சு.க பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலப் பயணம் தொடர்பில், கட்சியின் மத்திய செயற்குழுவோ அல்லது கட்சித் தலைமையோ தான் தீர்மானிக்க வேண்டுமென்றும் அது தொடர்பில், எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுமென்றும், சமரசிங்க எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments