சாவகச்சேரியில் அபிவிருத்தியை தடுத்து நிறுத்தும் சயந்தன்

சாவ­கச்­சே­ரிப் பிர­தே­சத்­தின் அபி­வி­ருத்­திப் பணி­கள் தன்னை மீறி நடந்து விடக் கூடாது என்ற வகை­யில் அவற்­றுக்கு வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் உறுப்­பி­னர் கேச­வன் சயந்­தன் தடங்­கல் ஏற்படுத்துகின்­றார் என்று குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றது.

கொடி­கா­மத்­தில் 4 வீதி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சி­க­ளுக்கு இடை­பு­குந்து தடங்­கலை ஏற்­ப­டுத்­தி­ய­து­டன், அதனை முன்­னெ­டுத்த உள்­ளு­ராட்சிச் சபை உறுப்­பி­னரை சயந்­தன் மிரட்­டி­னார் என்று இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­கள் எழுந்­துள்­ளன.

குரு­விச்­சான் வீதி, கொலனி முத­லாம் வீதி, ஒட்­டங்­கேணி போக்­கட்டி வீதி, கொடி­கா­மம் – கச்­சாய் ஊர் எல்­லைத் தெரு ஆகி­ய­வற்றை அபிவிருத்தி செய்து தரு­மாறு அந்­தப் பகுதி மக்­க­ளா­லும், அவர்களுடைய உள்ளூ­ராட்சி சபைப் பிர­தி­நி­தி­யா­லும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வ­னி­டம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனை­ய­டுத்து அந்த வீதி­களை நேரில் சென்று பார்­வை­யிட்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர், அவற்­றின் மறு­சீ­ர­மைப்­புக்­கான உத்­தேச மதிப்­பீட்டை வழங்­கி­னால் கொழும்­பில் சம்­பந்­தப்­பட்ட அமைச்சுக்களுடன் பேச்சு நடத்தி அவற்­றுக்­கான உத­வி­யைப் பெற்­றுத் தர­மு­டி­யும் என்று உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்.

மக்­கள் சந்­திப்­புக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரை அழைத்­துச் சென்ற பிர­தேச சபை உறுப்­பி­ன­ருக்கு அழைப்பு எடுத்த மாகா­ண­சபை உறுப்பினர் சயந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ண­ப­வன் ஊடாக அபி­வி­ருத்­திப் பணி­க­ளைச் செய்­யக் கூடாது. அவ்­வாறு செய்ய முற்பட்டால், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் ஊடாக அதனை நிறுத்­து­வேன் என்று குறிப்­பிட்­டார்.

No comments