வடக்கு அபிவிருத்தி அமைச்சராக சுமந்திரன் ?

மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சுக்களின் நிழல் அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவின் உற்ற நண்பரான தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க தலமையிலான கடந்த ஆட்சியின்போது டீ.எம்.சுவாமிநாதன் வசமிருந்த மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சு பறிக்கப்பட்டு குறித்த அமைச்சுக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்வசப்படுத்தியுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் அமைச்சர் டி.ம்.சுவாமிநாதன் முரண்பாடுகளைக் கொண்டிருந்த நிலையில் சுமந்திரனின் ஆலோசனையின் பேரிலேய சுவாமிநாதன் வசமிருந்த அமைச்சுக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்வசப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவை  பிரதமராக ஏற்றுக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சத்தியக்கடிதாசி கொடுத்திருந்த நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அதிருப்திகளைச் சமாளிக்கும்வகையில் குறித்த அமைச்சுக்கள் ஊடாக வடக்கில் ரணில் விக்கிரமசிங்க ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த அமைச்சின் பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினரே நிழல் அமைச்சராக இருந்து மேற்கொள்வர் என தெரியவந்துள்ளது.

No comments