வடகிழக்கில் நிர்வாக மொழி தமிழ் இல்லையா?


வடகிழக்கில் நிர்வாக மொழியான தமிழ் மொழியை அமுல்படுத்த கொரி முன்னாள் வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மனித உரிமைகள் ஆணைக்குழு படியேறியுள்ளார்.

தன்னை திருநெல்வேலியில் வழிமறித்த கோப்பாய் பொலிஸார் சிங்களத்தில் குற்றச்சாட்டுக்களை  எழுதி கொடுத்தமை மற்றது வரியனுமதி பத்திரத்தை வாகன முன்பக்க கண்ணாடியில் காட்சிப்படுத்தாமைக்கு தண்டப்பணம் செலுத்த கோரியமை தொடர்பிலேயே அவர் நீதிமன்ற படியேறியிருந்தார்.

இது தொடர்பில் குறிப்பாக நிர்வாக மொழியான தமிழ் மொழியை அமுல்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி பொலிஸ் அதிகாரிகளது  கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுக்க மனிதவுரிமை ஆணைக்குழு உறுதியளித்துள்ளதாக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments