நாற்றமெடுக்கின்றது கூட்டமைப்பின் கரவெட்டி பிரதேசசபை?


நெல்லியடி நகரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவுபுலத்திலுள்ளதாக தெரிவித்து கூட்டமைப்பு பிரதேசசபை தலைவர் துப்புரவு பணிகளை இடைநிறுத்திய பரிதாபம் தொடர்கின்றது. 

நெல்லியடி நகரிலுள்ள பொது மலசல மூடம் பராமரிப்பின்றி நீண்டகாலமாக உள்ளது.இது தொடர்பில் வீதி அபிவிருத்தி திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு நெல்லியடி பஸ்தரிப்பிட மலசலகூடத்தின் நிலை பற்றி ஆர்வலர்கள் சில கேட்டிருந்தனர்.

அதன்போது குறித்த மலசலகூடம் இவ்வாண்டின் பெப்ரவரி முதல் கரவெட்டி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பான துப்பரவு நீர்வசதி மற்றும் மின்இணைப்பு என்பவற்றை அவர்களே சீர் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

அதனையடுத்து பிரதேசசபையிடம் தொடர்புகொண்ட போது நெல்லியடி பஸ்தரிப்பிட உபஅலுவலகம் இலங்கை போக்குவரத்துச்சபையின் பருத்தித்துறை டிப்போவின் போக்குவரத்து தேவைக்கு பயன்படுத்துவது தெரியவருகின்றது.

குறித்த  பருத்தித்துறை டிப்போவின் அதிகாரியொருவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளரென தெரிவித்தே சுத்திகரிப்பு பணிகளை செய்யவேண்டாமென தவிசாளர் தடுத்துள்ளார்.

நாளாந்தம் ஆயிரக்கணக்கில் மக்கள் பயன்படுத்தும் மலசல கூடத்தை துப்புரவு செய்ய கூட வக்கற்ற பிரதேசசபை தவிசாளர் என்ன செய்கிறார் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments