கேட்டவை கிடைக்கவில்லை:அமைச்சும் வேண்டாமாம்!


கேட்ட அமைச்சுக்கள் கிடைக்காமையினாலேயே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில், அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று மனோ கணேசன், றிசாத் பதியுதீன், முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மலிக் சமரவிக்கிரமவுமே, அமைச்சர் பதவிகளை ஏற்பதில்லை என முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதிலும் மனோகணேசன் சமூக ஊடகங்களில் அதனை பகிர்ந்து கொண்டிருந்த நிலையில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது.

உண்மையின் தனது உப்புச்சப்பற்ற முன்னைய அமைச்சினை வேண்டாமென கோரிய மனோ புதிய அமைச்சொன்றை கோரியபோதும் ரணில் தரப்பு அதற்கு இணங்கியிருக்கவில்லை.

இதே கதையே, றிசாத் பதியுதீனிற்கும் நடந்துள்ளது.அமைச்சரவையினை 30 இனுள் அடக்க ரணில் முற்பட்டுள்ள நிலையில் கேட்ட அமைச்சு கிடைக்காததையடுத்தே அவர்கள் இருவரும் அமைச்சர் பதவி வேண்டாமென கைவிட்டதாக சொல்லப்படுகின்றது.

No comments