இந்தோனேசியாவில் சுனாமி அனர்த்தம்! 222 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் நேற்றிரவு மேற்கு ஜாவா தீவில் அமைந்துள்ள அனாக் கிரகடாவ் என்ற மலையில் எரிமலை வெடித்துச் சிதறியதால் இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து
திடீரென சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 20 மீட்டர் வரை அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன.

இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கப்பட்டன. ஜாவா தீவில் பான்டென் மாகாணத்தில் உள்ள பான்டெக்லாங் பகுதியையும், தெற்கு சுமத்ராவில் பாண்டர்லாம்பங் நகரையும் துவம்சம் செய்தன. சுனாமி அலைகள் தாக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. நெடுஞ்சாலைகள் மற்றும் உல்லாச விடுதிகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளது.

சுனாமியின் போிடனால் இதுவரை  222 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 843 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் 30 பேரை காணவில்லை எனவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

430 வீடுகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. 9 விடுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 10 இயந்திர படகுகள் உடைந்து நொறுங்கின எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#Tsunami #Indonesia




No comments