கடல் அலையில் சிக்கி மீனவர் பலி!

கடற்கொந்தளிப்பினால்  மீனவர் ஒருவர் வடமராட்சி கிழக்கு கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பரப்பில்,பலத்த அலையில் இழுத்துச் செல்லப்பட்டு சுழியில் சிக்குண்டு இவர் பலியாகியுள்ளார்.பலியானவர் அதே இடத்தை சேர்ந்தவரான ராஜன் (56வயது) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

மோசமான காலநிலையின் மத்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே தொடரும அடை மழை காரணமாக வடமராட்சி கிழக்கின் கிராமங்களில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments