மைத்திரி திறந்த இரணைமடு: காவு கொள்ள திரிகின்றதா?


கிளிநொச்சி இரனைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில்  காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார்.

குறித்த சம்பவம்  இன்று(09) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றது.இரணைமடுகுளத்தை பார்வையிடுவதற்கு இன்று ஞாயிற்றுக் கிழமை ஏராளமான  பொது மக்கள் கூடியிருந்தனர் அவர்களுடன் சிறுவர்களும் வருகை தந்திருந்தனர்.

இதன் போது  சிலர் தங்களது  பிள்ளைகளுடன் ஆபத்தான பகுதியான வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில்  குறித்த பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் பரப்பாக இருந்த போது மறுபுறம் சிறுமி ஒருத்தி நீருக்குள் வீழ்ந்து தத்தளித்த போது ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

No comments